முகேஷ் அம்பானியின் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ விநாயக சதுர்த்தியை முன்னிட்டு நாட்டின் 8 மெட்ரோ நகரங்களில் ஜியோ ஏர் ஃபைபரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ ஏர் ஃபைபர் என்பது ஒரு ஒருங்கிணைந்த எண்ட்-டு-எண்ட் தீர்வாகும், இது வீட்டு entartainment ஸ்மார்ட் ஹோம் சேவைகள் மற்றும் அதிவேக பிராட்பேண்ட் போன்ற சேவைகளை வழங்கும். டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, அகமதாபாத், பெங்களூரு, சென்னை மற்றும் புனே ஆகிய நகரங்களில் ஜியோ ஏர் ஃபைபர் சேவையை நிறுவனம் நேரடி கொண்டு வந்துள்ளது.
JioFiber உடன் ஒவ்வொரு வீட்டிற்கும் பாஸ்ட் இன்டர்நெட் சேவையை வழங்க எங்கள் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளோம். ஜியோ ஏர்ஃபைபர் மூலம், உலகத்தரம் வாய்ந்த டிஜிட்டல் பொழுதுபோக்கு, ஸ்மார்ட் ஹோம் சேவை மற்றும் பிராட்பேண்ட் ஆகியவை நாட்டில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளை சென்றடையப் போகிறது, இதன் மூலம் கல்வி, சுகாதாரம், ஸ்மார்ட் ஹோம் மற்றும் கண்காணிப்பு ஆகியவற்றில் இது உதவும். என முகேஷ் அம்பானி கூறியுள்ளார்.
ஜியோ இரண்டு வகையான திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. முதலாவது ஏர் ஃபைபர் மற்றும் இரண்டாவது ஏர் ஃபைபர் மேக்ஸ். ஏர் ஃபைபர் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் இரண்டு வகையான வேகத் திட்டங்களைப் பெறுவார்கள். 30Mbps மற்றும் 100Mbps ஆகும்.
AirFiber 30Mbps திட்டத்தின் விலை 599 ரூபாயாக இருக்கிறது 100 எம்பிபிஎஸ் ஏர் ஃபைபர் திட்டத்திற்கு, நீங்கள் ரூ.899 செலுத்த வேண்டும். இரண்டு திட்டங்களிலும், வாடிக்கையாளர்கள் 550 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள் மற்றும் 14 பொழுதுபோக்கு ஆப்களை பெறுவார்கள்.
Jio 100 Mbps ஸ்பீடில் மற்றொரு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மாதம் 1199 ரூபாய். இந்த திட்டத்தில், அனைத்து சேனல்கள் மற்றும் அப்ப்களின் சப்போர்ட் இருக்கிறது இது மட்டுமல்லாமல், நெட்ஃபிளிக்ஸ், அமேசான் மற்றும் ஜியோ சினிமா போன்ற பிரீமியம் ஆப்களுக்கான அணுகலையும் வழங்குகிறது.
அதிக இன்டர்நெட் ஸ்பீட் விரும்பும் வாடிக்கையாளர்கள் 'ஏர் ஃபைபர் மேக்ஸ்' திட்டத்தை தேர்வு செய்யலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இதன் கீழ், நிறுவனம் 300 Mbps முதல் 1000 Mbps வரை அதாவது 1 Gbps வரையிலான மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. 300 எம்பிபிஎஸ் வேக திட்டத்தின் விலை மாதத்திற்கு ரூ.1499 ஆகும். 500 எம்பிபிஎஸ் வேக திட்டத்தின் விலை ரூ.2499. 1 ஜிபிபிஎஸ் வேகம் கொண்ட திட்டத்தின் விலை ரூ.3999. 550 க்கும் மேற்பட்ட டிஜிட்டல் சேனல்கள், 14 பொழுதுபோக்கு பயன்பாடுகள் மற்றும் நெட்ஃபிக்ஸ், அமேசான் மற்றும் ஜியோ சினிமா போன்ற பிரீமியம் பயன்பாடுகளும் அனைத்து திட்டங்களுடன் கிடைக்கும்.
ஜியோ ஏர் ஃபைபர் கடைசி மைல் இணைப்பின் சிரமத்தை குறைக்கும் என்று ஜியோ கூறுகிறது. இந்த சேவையின் மூலம் 20 கோடி வீடுகள் மற்றும் வளாகங்களை சென்றடையும் என நிறுவனம் நம்புகிறது. இந்த திட்டத்தை எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு சமீபத்திய Wi-Fi ரூட்டர், 4K ஸ்மார்ட் செட்-டாப் பாக்ஸ் மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் இலவசமாக வழங்கப்படும் என்று நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
Jio AirFiber பயனர்கள் சுமார் 3 சாதனங்களை இலவசமாகப் பெறுகிறார்கள், இதைத் தவிர இவற்றுக்கான சந்தா எதுவும் உங்களுக்குத் தேவையில்லை. இந்த சாதனங்களில் வைஃபை ரூட்டர், 4கே ஸ்மார்ட் செட் டாப் பாக்ஸ் மற்றும் வாய்ஸ் ஆக்டிவ் ரிமோட் ஆகியவையும் உள்ளன.
நீங்கள் Jio AirFiber ஐ வாங்க விரும்பினால், jio.com ஐப் பார்வையிடுவதன் மூலம் இப்போதே முன்பதிவு செய்யலாம். இங்கே கிளிக் செய்வதன் மூலம் நீங்கள் அதை முன்பதிவு செய்யலாம்.