இந்த ஆண்டு ஜூன் மாதம், Itel நிறுவனம் இந்தியாவில் Itel S23 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியது. இப்போது நிறுவனம் Itel S23+ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த முற்றிலும் தயாராக உள்ளது. இந்த போன் விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். நிறுவனத்தின் படி, இந்த போன் ரூ.15,000 க்கும் குறைவான பட்ஜெட்டில் வழங்கப்படும். இந்த விலை ரேஞ்சில் 3D கர்வ்ட் AMOLED டிஸ்ப்ளேவுடன் வழங்கப்படும் முதல் போன் இதுவாக இருக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது.
இந்த Itel போனின் சிறப்பம்சம் பற்றி பேசினால் இதில் Itel S23+ ஆனது 6.78 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவுடன் கர்வ்ட் டிஸ்ப்லேவுடன் கொண்டிருக்கும். இது FHD+ ரேசளுசன் உடன் இது ஒரு 99 சதவிகிதம் DCI-P3 500 nits ப்ரைட்னஸ் மற்றும் Gorilla Glass 5 சப்போர்டுடன் வழங்கப்படுகிறது. அண்டர் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் வரும் நிறுவனத்தின் முதல் போன் இதுவாகும்.
itel S23 Plus யின் கேமரா பற்றி பேசினால், இதில் செல்ஃபிக்கு 32 மேகபிக்சல் இருக்கும், அதே நேரத்தில், இது 50 மெகாபிக்சல் பிரதான கேமராவுடன் வழங்கப்படும். இந்த போனில் Itel OS 13 அடிப்படையிலான Android 13 இருக்கும். இந்த Aivana GPT ஆனது AI- அடிப்படையிலான வைஸ் அசிஸ்டன்ட் உடன் வருகிறது.
ஐபோனில் இருக்கும் டைனமிக் ஐலேண்ட் நோட்டிஃபிகேஷன் அம்சத்தைப் போன்றே டைனமிக் பார் வசதியும் இதில் வழங்கப்படும். நோட்டிபிகேசங்களை தவிர, ரிமைன்டர் மற்றும் பேட்டரி பெக்கபை இது காட்டுகிறது.
Itel S23+ ஆனது Unisock T616 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 8 GB LPDDR4x ரேம் மற்றும் 256 GB UFS 2.0 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இதில் பேட்டரியை பற்றி பேசினால் 5000mAh மற்றும் இது 18W சார்ஜிங்கை சப்போர்ட் செய்யும் என கூறப்படுகிறது
and why the itel S23 Plus is better than all products in its price range in Nigeria and Africa at large. #itelS23PlusLaunch #ExperienceTheCurve pic.twitter.com/z5UM4UBEUx
— itel (@itelNigeria) September 19, 2023
The stage is set and the stars are ready to see, feel, and experience the itel S23+. Are you?
— itel (@itelNigeria) September 18, 2023
19.09.23 is the day. See you there! #itelS23PlusLaunch#ExperienceTheCurve pic.twitter.com/aRymys3hEC
ஆப்பிரிக்காவில், Itel S23+ விலை சுமார் யூரோ 112 (ரூ. 9,965) ஆகும். லேக் சியான் மற்றும் எலிமெண்டல் ப்ளூ ஆகிய இரண்டு கலர் விருப்பங்களில் வரும் இரண்டு கலர் வகைகளில் இதை வாங்கலாம். ஆப்பிரிக்காவில் உள்ள Itel இதில் Itel S23+ ஆனது 3 வருட வாரண்டி மற்றும் 6 மாதங்கள் இலவச ஸ்க்ரீன் ரீப்லேச்மென்ட் செய்யப்படுகிறது
Packed with a 6.8” FHD AMOLED 3D Curved Screen, In-Display Fingerprint, 16GB RAM, 256GB memory, 18W Fast Charge and a Type-C charging port, the itel S23+ is the only one of its kind. #itelS23Plus#ExperienceTheCurve
— itel (@itelNigeria) September 19, 2023